Home > Texts > அழகு தெய்வமாக வந்து

அழகு தெய்வமாக வந்து

September 24th, 2003 Pari Texts Leave a comment Go to comments

அழகு தெய்வமாக வந்து பழனி மலைமீதில் நிற்க்கும்
ஆதிசக்தி அன்னை தந்த பாலன் அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன்
நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணைசெய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் அவன் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

அழகு – beautiful | தெய்வம் – God | ஆக – like |  வந்து – comes | பழனி – Pazhani | மலை – hill/mountain | மீதில் – on top | நிற்க்கும் – stands ||
ஆதிசக்தி – AdhiSakthi/Parvathi | அன்னை – mother |  தந்த – given | பாலன் – child | அவன் – him |
அசுரர் – demons | தம்மை – us | வென்ற – won | வடிவேலன் – Bearer of the Vel ||
நல்ல – good | அமுதம் – nectar | என்னும் – like |  ஓர் – one |  தமிழில் – in Tamil | பாடிடும் – who sing | அன்பர் – devotees | வாழவே – to live | கருணை – compassion | செய் – do | குகன் – in-dweller of our Heart ||
அரன் – Siva | உகந்த – seated/accepted | குருவாம்- is the guru | உயர் – life | சீலன் – Silan | அவன் -his | அருள் – blessing | சுரந்தே – overflowing | காக்கும் – protector| அனுகூலன் – ||
.

குழந்தையாகக் குமரனாகக் கோவண் ஆடைத் துறவியாகக் கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்
கண்டு கூறும் மாயவினைகள் யாவும் வெல்வேன்
இந்த குவலயத்திலோர் கலியுகப்பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனைக்
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் உல்லக் குமுறலோய்ந்தே நல்லவழி செல்வேன்

குழந்தையாகக் – as a baby | குமரனாகக் – as a youth | கோவண் – loin cloth | ஆடைத் – dress | துறவியாகக் – ascetic | கோலம் – form | கொள்ளும் – takes on | காட்சி – vision, appearance | என்ன -  what | சொல்வேன் – can I say ||
கண்டு – on witnessing | கூறும் – says, talks | மாய- false, deceptive | வினைகள் – deeds | யாவும் – all | வெல்வேன் – win over ||
இந்த – this | குவலயத்திலோர் – world |  கலியுகப் – in Kali yuga | பெரு – might, large | வரதனாய்த் – boon giver, granter of wishes, benefactor | திகழ்ந்து – resplendent |அருளும் – blesses | கந்தனைக் – Kandan, Murugan ||
கும்பிட்டெந்தன் – praying | பிணிகள் – miseries | நீங்கி – dispelled | மகிழ்வேன் – rejoice | உல்லம் – heart | குமுறல் – churning, tumult | ஓய்ந்தே – subsides, ceases | நல்ல – right | வழி – path | செல்வேன் – I will take ||
.

நீலமயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும் நிமலனாம் குழந்தை முருகேசன்
அவன் நித்திலம்போல் முறுவல் வள்ளி நேசன் இந்த நீழ்னிலம்தனில் அன்பு செய்திடும்
அடியர் யாரையும் காத்து நின்றிடும் நித்ய சோதி வடிவாம் பிரகாசன்
தூரன் நெஞ்சில் நீங்காதென்றும் அன்பு வாசன்

நீல – blue | மயில் – peacock | மீதில் – on top of | நிற்போன் – stands | ஆவினன்குடியில் – temple town of Pazhani hill | தோன்றும் – appears | நிமலனாம் – Immaculate/Pure Being | குழந்தை – baby | முருகேசன் – like Murugan ||
அவன் – his | நித்திலம் – continually, eternal | போல் – like | முறுவல் – smile | வள்ளி – Valli, the gypsy girl | நேசன் – lover of  | இந்த – this | நீழ் – long | நிலம் – land, world | தனில் – in | அன்பு – love, friendship | செய்திடும் – makes ||
அடியர் – devotees | யாரையும் – all | காத்து – protects | நின்றிடும் – all | நித்ய – eternal | சோதி – jyoti/flame | வடிவாம் – form | பிரகாசன் – the resplendent one ||
தூரன் – Tooran (this poet’s name) | நெஞ்சில் – heart | நீங்காது – unlimited, unbounded |தென்றும் – appears | அன்பு – love | வாசன் – will live ||

Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.